Friday, April 9, 2010

கோபல்ல கிராமம் - கிரா

கதைசொல்லியின் நாவல். கோபல்ல கிராமம் எப்படி உருண்டு திரண்டு உருக்கொண்டதென்பது நாவலின் மையம்.

தெலுங்கு பேசும் மக்களின் ஒரு பகுதியினர், ஆட்சி செய்த துலுக்கர்களின் அராஜங்களுக்கு பயந்து தெற்கு நோக்கி பயமாகிறார்கள். அவர்கள் அடைந்த இன்னல்கள், அதைதாண்டி கிராமத்தை உருவாக்கி பெற்ற வெற்றிகளைப் பற்றி பேசும் நாவல். ஒரு சாதரண கதைசொல்லியின் குரலில் எந்தவித நம்பதகுந்த விவரங்கள் கையில் வைத்துக்கொண்டு பேசாமல், நடக்கும் விசயங்களை ஒரு அறியாமையுடனே அல்லது ஒரு கிராம மனிதர்களுக்கு தெரிந்த அதே அரைகுறை செய்திகளுடனே பயனிக்கிறது நாவல். அதுவே இந்நாவலின் சிறப்பும்கூட.

நாவல் முழுவதும், சம்பவங்களை நம்பாமல் தனித்தனி பாத்திரங்கள் அப்பாத்திரத்தின் குணாதிசயங்களை, அது கூறும் வார்த்தைளை கொண்டே முன்னேறுகிறது. எந்த இடத்திலும் தோய்வில்லை, அலுப்பில்லை. எளிய வார்த்தைகள், சின்ன சொற்றொடர்கள் சின்னச்சின்ன ஊர்களை கடந்து செல்லும் நீண்ட சாலையில் பயணிப்பது போல‌ பயனித்தபடி உள்ளது.


கழுவிலேற்றப்படும் திருடனை அவன் கொள்ளும் அவஸ்ததை, கழுவில் உள்ள தொழில்நுட்பங்கள், அப்போதைய சமூக விழுமியங்கள் என்று அத்தனை பக்கத்தில் நின்று அழகாக படம்பிடித்துக் காட்டுகிறார்.

வேறு ஆழமான எந்த சுயகண்டடைதலோ, வர்ணணைகளோ நாவலில் இல்லை, சொல்லபோனால் நாவல் படித்த முழு 'திருப்தி'யே இல்லை. கதைசொல்லியிடம் விடியவிடிய கதை கேட்ட திருப்தி மட்டுமே உள்ளது. இதுவே அதன் சிறப்பு என்று எடுத்துக் கொள்ளலாம். வர்ணனை என்றால் இந்நாவலில் பெண்களை வர்ணிப்பதுதான். ஆரம்பத்திலிருந்து கடைசிவரை ஏதாவது ஒரு பெண் வந்துகொண்டேயிருக்கிறார். அவள் சிரிப்பு, கண் என்று அழகுகாட்டிக் கொண்டேசெல்கிறார். அதில் ஒரு கிண்டல் தொனி எப்போதும் இருக்கிறது.

கடைசியில் வெள்ளையர்கள் வரும்போது, அவர்களை எப்படி கிண்டலாக பார்த்தார்கள் என்று சொல்லி, அவர்களை என்ன செய்வது என்று தெரியாமல், மிக வயதான மங்கதாயாரிடம் கேட்கிறார்கள். அவன் நம் பெண்களை துன்புறுத்தினானா? பொருட்களை கொள்ளை அடித்தானா? என கேட்கிறார். இல்லை என்றதும், அப்படியென்றால் நாம் அவனுடம் சேர்ந்துகொள்வோம் என்கிறார், எப்படி நம் மக்கள் வெள்ளையனோடு சேர்ந்தார்கள் என்பதை மிக எழிதாக சொல்லிவிட்டதாக தோன்றுகிறது. 

கட்டபொம்முவின் மரணத்துடன், வெள்ளையனின் கைஒங்குவதாக் முடிகிறது நாவல்.


-o0o-

2 comments:

சித்திரவீதிக்காரன் said...

கி.ராஜநாராயணன் என்ற அற்புதமான கதைசொல்லியின் கதைதான் கோபல்லகிராமம். வாசிக்க வாசிக்க விறுவிறுப்பாக போய்கொண்டேயிருக்கும். நல்ல நாவல். நல்ல பதிவு. நன்றி.

கே.ஜே.அசோக்குமார் said...

ஆமாம்.

உங்கள் கமெண்ட்டுக்கு நன்றி.