Friday, December 6, 2013

தமிழில் மகாபாரத நூல்கள்

மகாபாரதத்தை முழுமையாக ஒருவரால் படித்துவிட்டதாக சொல்ல முடிவதில்லை. வயதும் அனுபவங்களும் மீண்டும் மீண்டும் படிக்க நம்மை கோரியபடியே இருக்கின்றன. முதலில் நான் மகாபாரத்த்தை படிக்க ஆரம்பித்தபோது அதன் எதிர் எதிர் கதாபாத்திரங்களும் சம்பவங்களும் எரிச்சல் ஊட்டியபடி இருந்தன. ஆனால் இப்போது அப்படி இல்லை, மிக நீண்ட முழுமையான அனைத்தையும் உள்ளடக்கிய மேலும் செரிவான பகுதிகளைக் கொண்ட ஒரு மகாபாரத்தை மனம் நாடியபடி இருக்கிறது.



அந்த வகையில் கும்பகோணம் பதிப்பு – ம.வீ. இராமானுஜாசாரியார் மற்றும் முழு மகாபாரதம் – கிசாரி மோகன் கங்குலி மகாபாரதங்கள் படிக்க வேண்டிய புத்தக‌ங்கள். கும்பகோணம்பதிப்பு தயாரிப்பில் உள்ளது. கங்குலி மகாபாரதம் அருட்பெருஞ் செல்வன் அவர்களின் தயாரிப்பில் இணையத்தில் கிடைக்கிறது.

அனைவரும் படிக்க நினைக்கும் மகாபாரதத்தின் பரிந்துரைகள் கீழே உள்ளன:

  1. மகாபாரதம் – ராஜாஜி, வானதி
  2. பாஞ்சாலி சபதம் – சுப்ரமண்ய‌‌ பாரதி.
  3. மகாபாரதம் பேசுகிறது – சோ ராமசாமி, அல்லையன்ஸ்
  4. மகாபாரதம் அறத்தின்குரல் – நா.பார்த்தசாரதி, தமிழ் புத்தகாலயம்
  5. நித்ய கன்னி – எம்.வி.வெங்கட்ராம், காலச்சுவடு
  6. கிருஷ்ணா கிருஷ்ணா – இந்திரா பார்த்தசாரதி, கிழக்கு
  7. உபபாண்டவம் – எஸ்.ராமகிருஷ்ணன், உயிர்மை
  8. இரண்டாவது இடம் – எம்.டி. வாசுதேவ‌ நாயர் (குறிஞ்சிவேலன்), சாகித்ய அகாடமி
  9. யயாதி – காண்டேகர் (கா.ஸ்ரீ.ஸ்ரீ), அல்லையன்ஸ்
  10. இனி நான் உறங்கட்டும் – பி.கே.பாலகிருஷ்ணன் (ஆ.மாதவன்), சாகித்ய அகாடமி
  11. பருவம் – பைரப்பா (பாவண்ண‌ன்), சாகித்ய அகாடமி
  12. மகாபாரத மனிதர்கள் காட்டும் மகத்தான வாழ்க்கை – குர்சரன் தாஸ் (சாருகேசி), விகடன்
  13. ஜெயம் மகாபாரதம் ஒரு மறுபார்வை – தேவதத் பட்நாகர், விகடன்
  14. யுகாந்தா யுகத்தின் முடிவு – ஐராவதி கார்வே (அழகியசிங்கர்), ஓரியண்ட் லாங்க்மேன்
  15. முழு மகாபாரதம் – கிசாரி மோகன் கங்குலி (அருட் செல்வ பேரரசன்)(http://mahabharatham.arasan.info/)
  16. மகாபாரதம் கும்பகோணம் பதிப்பு – ம.வீ. இராமானுஜாசாரியார், ஸ்ரீசக்ரா

5 comments:

Anonymous said...

http://siliconshelf.wordpress.com/2010/11/06/மகாபாரதம்-சார்ந்த-படைப்ப/

கே.ஜே.அசோக்குமார் said...

நன்றி ஆர்வி, மிக்க பயனுள்ள பதிவு.

என் செல்வராஜ் said...

ஜெயம் மகாபாரதம் ஒரு மறுபார்வை – தேவதத் பட்நாகர், விகடன் பதிப்பு
படித்து இருக்கிறேன்.அருமையான புத்தகம். ஒவ்வொரு மாநிலத்திலும் வழக்கில் உள்ள மகாபாரத கதைகளையும் குறிப்பிட்டு இருக்கிறார்

Asokan tamil said...

கும்பகோணம் பதிப்பு கிடைக்கும் இடத்தைக் கூறினால் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்



கே.ஜே.அசோக்குமார் said...

புதிய பதிப்பு வருகிறது விரைவில் கிடைக்கலாம்