Tuesday, March 3, 2015

காதல் என்பது


திடீர் பயணமாக சென்னை சென்றிருந்தேன். பல்வேறு சிந்தனைகளோடு மக்கள் எலக்டிரிக் ரயிலில் பயணம் செய்கிறார்கள். பேருந்தில் இருக்கும் அவசரம் நெரிசல் இல்லாமல் இதில் பயணம் செய்ய முடிகிறது. திரிசூலத்திலிருந்து தாம்பரம் சென்றபோது பக்கத்தில் ஒரு ஜோடி அமர்ந்திருந்தது. காதல் ஜோடிதான். அவர்களைப் போன்றவர்களின் சேட்டைகளால்தான் அமைதியான ரயில் பயணம் இனிக்கிறது என நினைக்கிறேன். இருவருக்கும் 20 வயதுக்குள் இருக்கும். பெண் முஸ்லிம் கருப்பு பர்தா அணிந்திருந்தார் ஆகவே அவர் என்படி இருந்தார் என தெரியவில்லை. ஆண் முஸ்லிம்போலத்தான் இருந்தார். லேசாக தாடிபோல இருந்ததால் அப்படி தோன்றியது. கைகளை கோர்த்தும், தலையில் தட்டியும், வார்த்தை விளையாட்டுகளும் என்று அந்த 15 நிமிடத்தில் நடந்தது. எதிர் சீட்டில் காலை வத்தவளை வைக்காதே என்று அறிவுறுத்தினார் காதலன். வச்சா, வச்சா என்று சீண்டிக் கொண்டிருந்தாள் காதலி. மெதுவாகத்தான் பேசிக்கொண்டார்கள். இருந்தாலும் அவர்களை கவனிப்பதை யாரும் விரும்பாமல் இல்லை. அவர்களை ஓரக்கண்ணால் பார்பவர்களை கவனிப்பது ஒரு அலாதியான இன்பமும் இருக்கிறது.

இந்த காதல் விளையாட்டுகள் எல்லாம் காதலிக்கும்போது மட்டும்தான் இனிக்கிறது. திருமணம் ஆனதும் விளையாட்டுகள் முடிந்து வாழ்க்கைப் பற்றிய தீவிரம் சேர்ந்துவிடுகிறது. காதலித்தவர்கள் சேர்த்து வைத்திருந்த ஹாஸ்சியங்கலை தூரப் போட்டுவிட்டு பேத்தாசை எடுத்துக்கொள்கிறார்கள். காதலிக்குபோது தெரியும் ஒருவர் மீது இருக்கும் நல்ல விஷயங்கள் திருமணத்திற்குபின் அதுவே கெட்ட விஷயங்களாக தெரிய ஆரம்பிக்கின்றன. மது குடிப்பதை, சிகரட் குடிப்பதை ஒரு ஜாலியான குணமான பார்க்கப்பட்டது திருமணத்திற்குபின் அது பொறுக்கிதனமாக மாறிவிடுகிறது.
பொதுவாக பெண்கள் பேசிக்கொண்டே இருக்க ஆசைபடுவார்கள். ஆண்கள் மாறாக அமைதியாக வேடிக்கைப் பார்ப்பவர்களாகவும், அதிகம் விவாததில் கலந்து கொள்ளாதவர்களாகவே இருப்பார்கள். காதலிக்கும்போது சாதாரண விஷயங்களையே பரிமாறிக்க கொண்டவர்கள் பின் முக்கியமானவற்றைகூட பேசிக்கொள்வதில்லை.
ஆண்களுக்கு பொதுவாக இதில் அளுப்பு வந்துவிடுகிறது. இனி ஆக்கபூர்வமாக செய்யலாம் என்று நினைக்க ஆரம்பித்துவிடுகிறார்கள் போலும். இதைப் பெண்கள் தன்னை ஒதுக்குவதாகவும், வேண்டுமென்றே கண்டுகொள்ளாமல் செல்வதாக நினைத்துக் கொள்கிறார். அல்லது வேறு ஒரு பெண்ணின் தொடர்பு அவருக்கு ஏற்பட்டுவிட்ட‌து என்றும் நினைக்க ஆரம்பிக்கிறாள்.
ஆண் பெண் புரிதல்களைப் பற்றி ஆங்கிலத்தில் பல புத்தகங்கள் வந்துள்ளன. ஆண் மனைவியிடம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் எப்படி அவளை புரிந்துக் கொள்ளவது என்று நிறைய அறிவுரைகள் கொண்டவைகள் அந்த புத்தகங்கள். நானும் சில அதில் படித்திருக்கிறேன். கிட்டத்தட்ட எல்லாமே ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் என்பதுபோல் ஒரே மாதிரியான அறிவுரைகள்/வழிகாட்டல்கள்.
ஆண்களுக்கு எழுதப்படும் இதுமாதிரியான சுயஉதவிப் புத்தகங்கள் பெண்களுக்கு ஏன் இல்லை என்று சரியாக புரிவதில்லை. பெண்கள் தங்களை கவனிக்கும் இடத்தில் வைத்துக்கொள்கிறார்கள். ஆண் என்பவன் பெண்ணை சாந்தப்படுத்தி/அமைதிப்படுத்தியே ஆகவேண்டும் என்று சொல்வதுபோல். ஆண் தன்னை கவனிக்க தன்னை அழங்கரித்து கொள்வதும், ஆணுக்கு பிடித்த உணவுகளை சமைப்பதும், ஆணுக்கு தேவைப்படும் இன்பங்களை கொடுப்பதும் பெண்ணின் கடமையாக சமூகம் தீவிரமாக நம்புவதுபோலவும் இருக்கிறது.
இந்த புத்தகங்களில் அதிகம் காணப்படுவது, வெளியிலிருந்து வீட்டிற்கு வந்ததும் பெண் சொல்லும் எந்த பேச்சையும் மறுத்துப் பேசக்கூடாது என்பதுதான். ஆமாம் மறுத்துப் பேசும் ஒவ்வொரு சமயமும் அதை உணர்ந்திருக்கிறேன். கலைத்து வரும் ஆண், அன்றைய பொழுதின் எல்லாச் செய்திகளையும் இடைவிடாமல் சொல்லும் பெண்ணை எப்படி பொறுத்துக் கொள்கிறானோ தெரியவில்லை.
தோல்வியடையும் திருமணங்களின் முக்கியமான விஷயமே இதுதான் என நினைத்துக்கொள்வேன். ஆண்களால் இரண்டு நாள்கூட யாரிடமும் பேசாமல் இருக்க முடியும், ஒரு பெண்களால் இரண்டு மணி நேரம்கூட பேசாமல் இருக்க முடியாது. ஒரு இன்டர்வியூ, ஒரு ரயில் பயணம், ஒரு சினிமா ஹால், ஒரு உணவு விடுதி என்று எந்த இடத்திலும் புதிய மனிதர்கள் குழுமும் இடத்தில் இரண்டும் பெண்கள் போதும், சட்டென பேசி அந்த இறுக்கத்தை போக்க.
சின்ன வித்தியாசம் வந்ததும் ஆண்கள் பேசுவதை முதலில் நிறுத்துவார்கள். பெண்கள் தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பார்கள். அந்த நேரத்தில் பெண்களுக்கு பேசுவது சமாதானத்திற்காகவும், ஆண்களுக்கு சண்டையிடுவத்ற்காகவும் என அர்த்தமாகிறது. மேலும் விரிசல் ஏற்ப‌ட்டு விடுகிறது.
பெண்ணை எப்படி அடக்குவது என்று ஆணும், ஆணை எப்படி பேசவைப்பது என்று பெண்ணும் முயற்சிப்பதில் அவர்களுக்கு இடையேயான பந்தத்தை முறித்துவிடுகிறது. பிரிக்கும்போது முடிச்சுவிழுவதும், முடிச்சிடும்போது பிரிவதுமான நூல்கண்டாக இந்த ஆண்-பெண் நட்பை நினைக்கிறேன். என்றேன்றும் இது சிக்கல் தான்.

No comments: