Thursday, March 5, 2015

இந்தியாவின் மகள்

தில்லியில் இருந்த போது நான் உணர்ந்தது அந்த நகரம் பெரிய சின்ன சின்ன கிராமங்களின் தொகுப்பு என்று. ஆம் அப்படி தான், மிக எளிமையாக மக்கள் வாழ்கிறார்கள். செங்கல்வைத்து மட்டும் கட்டப்பட்ட வீடுகளில் சிமெண்ட் பூச்சு செய்வதே யில்லை. மிக வசதிபடைத்த வீடுகள் மிக குறைவாக இருக்கும். எல்லா மாநிலங்களிலிருந்தும் மக்கள் அங்கு வந்து வாழ்கிறார்கள். ஆகவே அது யாருடைய நிலம் என்கிற அடிதடி ஏற்படுவதில்லை. பீகார், உபி யிருந்து வருபவர்கள் தொடங்கி வங்காளம், வடகிழக்கு, பஞ்சாப் மற்றும் தென் இந்தியர்களை காணமுடியும்.
பீகார் உபி மக்கள் மிக படிப்பறிவு அற்ற வன்குணங்கள் கொண்டவர்கள் என்று அங்கிருக்கும் மக்களே கூற கேட்கலாம். பொதுவாக அந்த மாநிலங்களில் குற்றம் செய்துவிட்டு தப்பிப்பதற்காக தில்லி வருபவர்கள். மீண்டும் குற்றங்கள் செய்துவிட்டு பக்கதில் உள்ள காசியாபாத், வசந்தவிகார் போன்ற பகுதிகளுக்கு சென்றுவிடுவார்கள். ஏனெனில் இரண்டும் வேவ்வேறு மாநில பகுதிகள். முதலாவது உபியும், இரண்டாவது ஹரியானாவாகும். போலீஸ் உடனே வந்து பிடிக்க முடியாது அங்கு வரும்போது வேறு பகுதிக்கு சென்றுவிடுவார்கள்.

அங்கிருக்கும் சமயங்களில் தொடர்ச்சியாக குற்றங்கள் நடப்பதாக தெரிந்தது. வழிப்பறி, கொலை, கொள்ளை, என்று ஒவ்வொரு நாளும் நடக்கும் ஒரு வாரத்தில் ஒரு நாள் பெரியளவில் கொலைகள் நடந்திருக்கும்.
இங்கு குற்றவாளிகளின் உளவியலை புரிந்துக் கொள்வது கடினம். எங்கோ ஒரு இடத்தில் அவர்களுக்கு நடந்த கொடூரங்களுக்கு மறைந்து வாழும் தில்லியில் வந்து தங்கள் வன்மங்களை தீர்த்துக் கொள்வார்கள். அவர்கள் இருந்த நிலங்களில் சாதிக் கொடுமை, மதக் கொடுமை, இனக் கொடுமை என்று பல இருக்கும். படிக்காத அம்மக்களிடம் நாம் இதற்குமேல் எதிர்ப்பாக்கவும் முடியாது.
தில்லியில் வாழும் பெண்கள் மிக சுதந்திரமாக இருக்க விரும்புபவர்கள் என்பது தெரியும். அவர்களும் பல்வேறு பகுதியிருந்து வந்தவர்கள் அவர்களின் குழந்தைகள். மிக சுதந்திரமாக வளர்க்கப்பட்டவர்கள். சென்னை, பெங்களூருவை விட அதிக சுதந்திர சிந்தனை கொண்டவர்கள். ஏனெனில் அவர்களின் நிலங்களுக்கு அவர்கள் திரும்பி செல்லப்போவதில்லை. மரபானவை என‌ நாம் நினைப்பவைகள் அவர்களின் தோள்களில் இல்லை. எந்த சங்கடமும் இல்லாமல் எல்லா ஆண்களுடன் பேச பழக முடிகிறது. நான் இருந்தவரை எந்த பெண்ணுடனும் நான் பேசியிருக்கிறேன். அவர்களின் தாய் தந்தையர்கள் இதை தடுத்தோ அல்லது எதிர்த்தோ ஒரு வார்த்தையும் கூறியதில்லை.
வயது ஆண்கள் பெண்களை எளிதாக் கவரமுடியும். சொல்லப்போனால் பெண்கள்தான் அங்கு ஆண்களை சைட் அடிக்கிறார்கள். (காதலன் படத்தில் பெண்ணை நினைத்து உருகிப் பாடும் என்னவளே பாடல், இந்தியில் ஆணை நினைத்து பெண் பாடுவதுபோல் இருக்கும்.)
இந்த மாதிரியான சூழலில் கட்டுப்பட்டியான கிராமத்திலிருந்து கூலி வேலைக்கு வரும் பீகாரிகள், உபிவாலாக்கள் திடுக்கிட்டு மிக செக்ஸியாக உடையணிந்திருக்கும் பெண்களைக் கண்டும் காமுற்று கற்பழிக்கிறார்கள் அதை தொடர்ந்து கொலை செய்கிறார்கள். அந்த பெண்களின் வெளிப்படையான அனுகுமுறையும் அவர்களை மேலும் வெறிக் கொள்ள தூண்டுகிறது. இது குற்றமில்லை, இதை விட்டுவிட வேண்டும் என கூறவில்லை. ஆனால் குற்றம் செய்ய சூழ்நிலை மிகமிக சாதகமாக இருப்பதாகவே நினைக்கிறேன்.
நிர்பயாவை கொன்ற குற்றவாளி சொல்லியிருக்கும் வார்த்தைகள் அதை உறுதி செய்வதாகவே இருக்கிறது. அவள் எங்களுக்கு ஒத்துழைத்து இருந்தால் நாங்கள் கொன்றிருக்க மாட்டோம்.
சூழ்நிலையை சாதகமாக வைத்துவிட்டு ஒத்துழைக்க மறுத்தால் இதுதான் நடக்கும் போலும். ஆகவே நாம் தமிழகத்திலும் பிற மாநிலங்களிலும் இந்த சூழ்நிலைகளை அமைத்து தர வேண்டாம் என்கிறார்கள். கொஞ்சம் பாலீசாக வேறு வார்த்தைகளில். நாங்கள் எப்படி உடையணிவது என்று அறிவுறுத்த வேண்டாம். கற்பழிக்க வேண்டாம் என்று உங்கள் மகனுக்கு அறிவுறுத்துங்கள் என்று சொல்லும்  பலகைகளை தாங்கி ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.
கொஞ்ச நாள் முன்பு சென்னையில் சரிகா ஷா என்கிற பெண் கொலை செய்யப்பட்டபோது தமிழகமே பொங்கி எழுந்தது. அப்பாவியான அந்த கொலைகாரன் தெரியாமல் நடந்ததாக கூறினான். ஆனால் ஆணின் திமிர், ஆணவம், அகம்பாவம் என்று கூறிக்கொண்டிருந்தார்கள். ஒரு அரசியல் தலைவரின் வெற்றியை கொண்டாடுவதற்கு செய்யப்பட்ட பேரணியில் இந்த கொலை நடந்தது. அந்த மாதிரியான பேரணி போன்றவற்றில் எதுவும் செய்து கொள்ளலாம் என்கிற இடத்தை ஏற்படுத்திக் கொடுத்தது யார்? அங்கு செய்யப்படும் எந்த சின்ன பெரிய குற்ற/கலவரங்களுக்கு நீங்கள் பொறுப்பேற்கவேண்டாம் என்று சொன்னவர்கள் யார்?

இந்த சமூகத்தில் யாரோ ஏற்படுத்திக் கொடுக்கும் இந்த மாதிரியான இடங்களுக்கு பலியாவது இந்த சமூகமும்தான். 

No comments: