Saturday, April 11, 2015

ஆட்டிசம்


ஆட்டிசம் என்றால் என்ன என்பதை பற்றி சமீபகாலத்தில்தான் பலர் அறிந்திருக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஒவ்வொருவர் குடும்ப வகையில் அல்லது தன் அக்கம்பக்கதில் உள்ளவர்களில் வீடுகளில் ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் என்ற குறைபாடு இருப்பதை கொண்டு அதை அறிந்திருப்பார்கள். ஆனால் ஆட்டிசம் என்பது ஒரு வியாதி அல்ல. மூளை செயல்திறனில் உள்ள ஒரு குறைபாடு மட்டும்தான் என்பது யாருக்கும் தெரிந்திருக்காது. ஆட்டிசம் ஸ்பெக்ரம் டிஸ்சாடர் (ASD) எனப்படும் ஒரு பொதுகுறைப்பாட்டின் ஒரு பகுதி மட்டும்தான் ஆட்டிசம். ஆனால் எல்லாவற்றையும் ஆட்டிசம் என்றே பொதுவாக நாம் குறிப்பிடுகிறோம்.

மூளைவளர்ச்சியின்மைக்கும் ஆட்சிசம் குறைபாட்டிற்கும் நிறைய வித்யாசம் இருக்கிறது. இரண்டும் பிறவியிலேயே இருப்பது தான். ஆனால் மூளைவளர்ச்சி குன்றியவரும் ஆட்சிசம் குறைபாடு உள்ளவரும் மூற்றிலும் வேறானவர்கள். ஆட்சிசம் குறைப்பாடு உள்ளவர்கள் அக்குறைபாடு உள்ளதே இரண்டு வயதில்தான் தெரிய ஆரம்பிக்கும். சாதாரண நாம் நினைக்கும் தினப்படி வேலைகளை தங்களே செய்ய முடியாது. அதாவது செய்யும் திறன் அற்றவர்களாக இருப்பார்கள். ஆனால் வேறு சில மூளைவளர்ச்சி குன்றியவர்களிடம் இல்லாத அதீத திறன் கொண்டவர்களாக இருப்பார்கள்.

படம் வரைவது, பாட்டுப் பாடுவது, இசை கருவிகளை இசைப்பது, போன்றவைகளை எந்த பெரிய முன்அனுபவம் இல்லாமல் செய்யமுடியும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆட்சிசம் உள்ளவர்கள் ஐகூ சற்று குறைந்தவர்களாக இருப்பார்கள். ஆனால் அது எந்தவகையிலும் மூளைவளர்ச்சியற்றவர்களைவிட அதிகமாகவே இருக்கும். ஆட்சிசம் உள்ளவர்கள் தங்களை அறிந்தவர்களாக இருப்பார்கள். தன் திறமை, ஆளுமை, உடல்சார்ந்து தன் இருப்பை அறிந்தவர்கள் தாம். ஆனால் அதை செயல்களில் வெளிப்படுத்து திறன் அற்றவர்கள். உண்மையில் சொல்வதென்றால் தான் வெளிப்படுத்த முடியாமல் இருக்கிறொம் என்றும் அறிந்தவர்கள்.

மூளை வளர்ச்சியற்றவர்களுக்கு எதையும் கற்றுக்கொடுக்க முடியாது. ஆனால் ஆட்சிசம் உள்ளவர்களுக்கு அவர்களுக்கு என்ன தெரிந்துகொள்ள ஆர்வம் அல்லது எது அவர்களுக்கு வரும் என்பதை கண்டு அதை பயிற்றுவிக்க முடியும். வீட்டில் சமையல் வேலைகள் அவர்களால் செய்யமுடியும். பாத்திரங்கள் கழுவி வைக்க தெரிந்திருக்கும். துணிகளை துவைக்க, காயவைக்க கற்றுதரமுடியும். அதேபோல் வெளியிடங்களில் பேப்பர் வேலைகள், கலைநுட்ப வேலைகள், தையல் வேலைகள் போன்றவைகளையும் பயிற்றுவிக்க முடியும்.

எல்லா ஆட்சிச குழந்தைகளும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல. அவர்களின் ஐகூ, செயல்திறன் பொருத்து வேறுபட்டவர்களாக இருப்பார்கள். இது மூளைவளர்ச்சி அற்றவர்களின் செயல்களுக்கு நேர் எதிரானது. ஒரே இடத்தில் இருக்கும் ஆட்சிச குழந்தைகள் ஒவ்வொருவரும் வெவ்வெறு திறமைகளை கொண்டிருப்பார்கள். ஒருவர் காய்கறி நறுக்குவதில் திறமையானவராகவும், ஒருவர் ஆயில் பெயிண்ட் செய்வதில் திறமையானவராகவும் இருப்பதை கொண்டு அவர்களின் ஆளுமையை புரிந்துக் கொள்ளலாம். அமெரிக்காவில் ஒரு பெண்மணிக்கு வரிசையாக பிறந்த ஐந்து குழந்தைகளில் அனைவரும் ஆட்சிச குறைபாடு கொண்டவர்களாக இருந்தார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக வெவ்வெறு தனித்தன்மைகள் கொண்டு இருந்தார்கள்

ஆட்டிச குழந்தைகளை எப்படி வளர்ப்பது எப்படி பராமரிப்பது என்கிற சிக்கல் எல்லா நாடுகளிலும் இருக்கிறது. மேலைநாடுகள் தான் இதை ஒரு துறையாக முதலில் பிரித்து அதிக கவனம் செலுத்தி அவர்கள் தங்கள் குறைபாடுகளிலிருந்து வெளிவருவதற்கு முயற்சித்தன. இந்தியாவிலும் பல்வேறு அரசு அமைப்புகளும் தனியார் அமைப்புகளும் தொடர்ந்து செயல்பட்டு இக்குழந்தைகள் குறைபாடுகளிலிருந்து வெளிவர உதவி செய்கின்றன. எல்லா குழந்தைகளும் முழுமையாக வெளிவந்துவிடும் என்று சொல்வதற்கில்லை. ஆனால் ஒரு முறை ஒரு விஷயத்தை கற்றுக்கொண்டுவிட்ட குழுந்தை தன் வாழ்நாளில் அதை மறப்பதில்லை.

தனக்கு எது தேவை எது தேவையில்லை என்று சொல்லத்தெரியாதவர்கள் இவர்கள். ஒரு குறிப்பிட்ட வேலைகளை திரும்பதிரும்ப செய்வத்தை வழக்கமாக கொண்டிருப்பார்கள். விளையாட்டுப் பொருட்களை வரிசையாக அடுக்கிவைப்பது, விட்டில் உள்ள தலையணை, புத்தகங்கள் மாதிரியான பொருட்களை ஒரு குறிப்பிட்ட வகையில் அடுக்கி அல்லது வரிசைப்படுத்துவதை வழக்கமாக கொண்டிருப்பார்கள்.

இக்குழந்தைகளின் குறைபாட்டை முழுமையாக குணப்படுத்த முடியாது. அவர்களின் எட்டு அல்லது பத்துவயது வரை சில முக்கிய பழக்கங்களை அவர்களுக்கு கற்று தருவதினால் அவர்களின் மற்றநாட்களில் மற்றவர்களின் உதவியில்லாமல் இருக்கமுடியும். அந்த வயதிற்க்கு மேல் எதையும் கற்றுதருவது சிரமம்.

ஆட்சிசம் எதனால் ஏற்படுகிறது என்பதை இன்றும் சரியாக கண்டுபிடிக்கபடவில்லை. அதற்கு 400 காரணம் இருப்பதாக் சொல்லப்படுகிறது. முக்கியமாக உலகில் உணவில், காற்றில் நஞ்சுதன்மை அதிகரிப்பதும் ஒரு காரணம்.

அதையும்விட முக்கியமாக நாம் புரிந்துக் கொள்ளவேண்டியது இக்குழந்தைகளை புரிந்துக் கொள்வதுதான். பள்ளி, பொதுஇடங்களில் முறையான அங்கீகாரம் அளிக்கப்படவேண்டும் என்பதும் முக்கியம்.

No comments: