Tuesday, March 29, 2016

விளையாட்டுப் பெண்கள்






பெண்கள் பைக் போன்ற பெரிய வாகனங்களை ஓட்டிச்செல்வதை அவ்வளவாக மற்ற பெண்கள் விரும்புவதில்லை. அதேபோல கடினமான எடைகளை தூக்கிச் செய்யும் உடற்பயிற்சிகளை பெண்கள் செய்யகூடாது என்கிற எண்ணம்  பெண்களுக்கு இருக்கிறது. அதனால்தான் என்னவோ பெண்களுக்கு விளையாட்டுகள் போன்ற விஷயங்கள் சரியாக வருவதில்லை என்று நினைக்கிறேன்.
நான் ஒன்பதாவது படிக்கும்போது வாலிபால் விளையாட மிகவும் ஆர்வமாக இருந்தேன். பள்ளி விளையாட்டுக்களிலும் விளையாடி இருக்கிறேன். குச்சியாக இருப்பதால் சப்ஸ்டிடியூடாக வைத்திருந்தார்கள். எங்கள் பள்ளிக்கு விளையாட வந்த பெண்கள் பள்ளி அணி, சர்வீஸ் பந்தை தடுக்கக்கூட முடியாமல் திணறினார்கள். யாருமே இல்லாத இடத்தில்கூட லீ..வீட் என்று அலறி பந்தை கீழே விட்டு கூடியிருந்தவர்களை சிரிக்க வைத்தார்கள். அவர்களுக்கு அப்படிதான் பெண் பயிற்சியாளர்களால் பணிக்கப்பட்டிருந்தது. எந்த சூழலிலும் தங்களுக்கு இட்ட பணிகளை மறக்காமல் செய்கிறார்கள் என்று தோன்றியது.

வேறு ஒரு சமயத்தில் பள்ளியில் விருப்பமுள்ள சில‌ பெண்களுக்கு ரிங் பால் சொல்லி கொடுக்கப்பட்ட போது, பந்தை பிடிக்க அவர்கள் செய்த பிரயதனங்களை பார்க்கும்போது சிரிப்பாக இருந்தது.
டி20 உலககோப்பை கிரிக்கெட்டை பார்த்துக்கொண்டிருந்த ஒரு நாளில் சின்ன பையன்களேல்லாம் விளையாடுவதை இங்கே ஏன் காட்டுகிறார்கள் என்கிற சின்ன ஆச்சரியத்தில் பார்த்தப்போது அது சிறுவர்கள் அல்ல பெண்கள் என்று தெரிந்தது. மார்குலுங்க ஓடிவரும்போது ஆம் என்று உறுதியும் ஆகியது.
உலககோப்பை கிரிக்கெட் என்பதால் மிக அதிக திறத்தோடு விளையாட கூடியவர்களாக இருப்பார்கள் என்று தோன்றியது. ஆனால் முன்பு எப்படி இருந்ததோ அப்படிதான் இப்போதும். பவுண்ரியை நோக்கி ஓடும் பந்தை பின் தொடர்ந்து ஓடுகிறார்களே ஒழிய அதை பிடிக்க மாட்டேன் என்கிறார்கள். லூசாக பவுல் செய்யப்பட்ட பந்து பிட்ச் ஆகும் வரை காத்திருக்கிறார்கள். ஒரு அடி முன்னால் வந்த அதை புல்டாசாக விரட்ட முடியும். காத்திருந்து பின் அதை தட்டிவிட்டு பிடிக்கிறார்களா என்று பார்த்து ஓடுகிறார்கள். இதன் காரணமாகவே பெண்கள் கிரிக்கெட்டை பார்ப்பதில்லையோ என தோன்றுகிறது. மித்தாலிராஜ் போன்ற சில இந்திய விராங்கனைகள் தவிர மற்றவர்கள் பீல்டிங்கில் மிக மோசம். கிட்டதட்ட எல்லா அணியிலும் இப்படிதான் இருக்கிறது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணி பெண்கள் சற்று உடல் பலத்தோடு இருப்பதை சில விளையாட்டுக்ளில் பார்த்திருக்கிறேன்.
சுவாரஸ்யம் ஏற்படுத்துவது அவர்கள் ஓடும்போது காமேரா பின்னால் தொடரும்போதும், விக்கெட்டுக்கு இடையில் ஓடி தொப் என்று விழும்போதும்தான்.
விளையாடும் பெண்களை ஆண்கள் எதற்கு பார்க்கிறார்கள் என்கிற உண்மை விளையாடாத பெண்களுக்கும் தெரியும் என்பதை ஆண்கள் லேசாகத்தான் புரிந்து வைத்திருக்கிறார்கள். நீங்களெல்லாம் டென்னீஸ் பார்க்கிறது எதுக்குன்னு தெரியாதா என்று ஒரு பெண், அலுவலத்தில் எல்லோர் முன்னிலும் கூறினார். சாதாரணமாக பெண்களுக்கு விளையாட்டு வராது என்பதை ஆண்கள் புரிந்து வைத்திருப்பார்கள். ஒரு சின்ன ரப்பர் பந்தை அவர்கள் முன் தூக்கிபோட்டாலும் பிடிக்க வராது என்பது அவர்களுக்கு தெரிந்திருக்கும்.
உடல் பற்றிய பிரஞ்சை பெண்களுக்கு பொதுவாக இருப்பதுதான் அவர்கள் கடினமாகவும், அதிக சிரத்தையுடனும் எடுத்து விளையாட முடிவதில்லை என்று நினைக்கிறேன். பாண்டியா முகத்தில் அடிபட கிழே விழுந்து காச் பிடித்ததுபோல பெண்கள் செய்வதில்லை என்பதை நாம் இப்படிதான் புரிந்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

No comments: