Monday, August 8, 2016

அல்லோலபதி மருத்துவம்



பலவகை மருத்துவங்கள் இந்தியாவில் பயன்பாட்டில் இருந்தன. ஆயுர்வேதம், சித்தமருத்துவம், யுனானி, நாட்டு மருத்துவம், கைமருத்துவம் என்று அவரவர்களுக்கு தேவைக்கும் அவசியத்திற்கும் பொருத்து இந்த மருத்துவங்கள் பயன்பட்டன. நோய் தீர்வுக்காக ஒன்றுக்கொன்று உறவாடிக் கொண்டன. விட்டுக் கொடுத்துக் கொண்டன. இன்று ஒரே மருத்துவம்தான் அது அலோபதி என்று சொல்லப்படும் ஆங்கில மருத்துவம் மட்டும்தான்.. இன்றும் மேற்ச்சொன்ன மருத்துவங்கள் இருந்தாலும், அது கடைசி தீர்வாகவோ, இதையும் முயன்று பார்க்கலாம் என்றோ, அல்லது இல்லாதவர்களின் பிரியமானதாகவோதான் இருக்கிறது. எல்லாவற்றிற்கும் உடனடி தீர்வு வேண்டுமென விரும்புகிற மக்களுக்கு மட்டுமல்ல, நம்பகமான மருத்துவமாக அலோபதிதான் திகழ்கிறது.
ஏன் அலோபதிதான் சிறந்த மருத்துவமாக இருக்கிறது? பலவகையிலும் செலவுபிடிக்கிற, பகற்கொள்ளையர்களாக செயல்படும் அல்லோபதி டாக்டர்களை மக்கள் தினம் சந்தித்துக் கொண்டு இருக்கிறார்கள். சின்ன விரல் வலியிருந்து பெரிய நெஞ்சுவலிக்கு என்று எல்லாவற்றிற்கும் அதைத்தான் நாடுகிறார்கள். குணமாகுமா இல்லையா என்பதைத்தாண்டி அதனிடம் எல்லாவற்றிற்கும் மருந்து இருக்கிறது. அதுஒரு பெரிய தொடர் செயல்பாட்டை கொண்ட பல்வேறு அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்படும் ஒரு கூட்டு இயக்கமாக உலகம் முழுவதும் பரயிருக்கிறது.. அதன் நம்பகதன்மை அதுவாகத்தான் இருக்கும்.
அன்று நாட்டு மருத்துவம் என்று பிரபலமாக சொல்ப்பட்ட மருந்துவம் இன்று ஊரிலேயே சிலரால் மட்டும் சொல்லப்பட்டு கிட்டதட்ட காணாமல் போய்விட்ட நிலையில் தான் இருக்கிறது.
அவசரத்திற்கு கை மருந்து என்று சொல்லும் மருத்துவ வழக்கம்கூட இன்று இல்லை என்று சொல்லலாம். நாட்டு, கை மருத்துவங்களை செய்பவர்களை நாம் ஊக்கப்படுத்துவதில்லை. எதற்குங்க வம்பு என்று ஒரு பேச்சு வந்துவிடுகிறது. மக்களுக்கு அந்த மருத்துவங்களின் மேல் முழுமையாக நம்பிக்கை இழந்து வருகிறார்கள். மற்ற மருத்துவங்களில் நம‌க்கு முழுமையாக நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. சின்ன கிராமங்களில் கூட‌ கைமருந்து காணாமல் போய் மெடிகல்களில் இன்ன பிரச்சனை என்று சொல்லி மருந்து வாங்க மக்கள் பழக்கப்பட்டிருக்கிறார்கள்..
நாட்டு மற்றும் கை மருத்துவத்தை பயன்படுத்தாததால் அதில் இருக்கும் சில நல்ல விஷயங்களை நாம் இழந்து வருகிறோம். தலைவலி, சுளுக்கு, வயற்றுப்போக்கு போன்ற சாதாரணமான உடல் பிரச்சனைகளுக்கு எளிய சின்ன உணவு மாற்றத்தாலும், எளிதில் வீட்டில் கிடைக்ககூடிய மருந்துகளைக் கொண்டே குணப்படுத்திவிட முடியும். இது போன்றவற்றிற்கு அலோபதியை நாடுவதால் முக்கியமாக நாம் இழப்பது இரண்டு விஷயங்கள். ஒன்று அந்த மருந்துகளில் நமக்கு இருக்கும் தொடர்பை இழப்பதும் அதனால் நம் அடுத்த தலைமுறைக்கு அதை கடத்துவது தடைபடுவதும், இரண்டாவதாக நம் உடல்சார்ந்த பிரச்சனைகள் அதிகரிப்பதும் நடக்கிறது.
சித்த மற்றும் ஆயுர்வேத மருந்துகளின் வளர்ச்சி புதிய வாழ்க்கைக்கும் நோய்களுக்கும் தகுந்தார்ப்போல் வளராமல் போய்விட்டது. சித்த மருத்துவத்தை எந்த அளவிற்கு நம் பாரம்பரியம் நம் மருத்துவம் என்று நம்புகிறோமோ அதே அளவிற்கும் வெறுக்கவும் செய்கிறோம்.
ஏனெனில் பழமையை விரும்புவது புதுமைக்கு நாம் செய்யும் தீங்காக நினைப்பதுதான். சித்த மருத்துவம் எளிய மனிதர்களால் செய்யப்படுவதும் அந்த மனிதர்களின் அப்பாவிதனங்களை நாம் நமது உயர்ந்த தனங்களால கீழாக நினைப்பதும்தான் காரணம். போலியான சித்த மருத்துவர்களும் அவர்களின் மருந்துகளால் நன்மை ஏற்படாததும் ஒரு காரணம். புதிய வளர்ச்சிகளற்ற சித்த/ஆயுர்வேத மருந்துவத்தில் இருக்கும் போலி மருத்துவர்களைப் போல அலோபதியிலும் போலி மருத்துவர்கள் உண்டு. வாரம் ஒன்றாவது போலி டாக்டர்களின் புகைப்படங்களுடன் செய்தி வெளிவாவது நடந்தாலும் அலோபதி மருத்துவதின் மீதிருக்கும் நம்பிக்கை குறையவில்லை.
உண்மையில் நாம் வாங்கும் ஆங்கில மருந்துகள் அதன் விலையில் பத்து சதவிகிதம் கூட கொடுக்க வேண்டியதில்லை. ஐந்துரூபாய் மதிப்புள்ள மருந்துகள் 100வரை விற்கப்படுகின்றன. அதன் பிராண்ட் பெயரினால் அந்த விலைகள் வைக்கப்பட்டு அந்த தயாரிப்பு நிறுவனங்கள் அதிக லாபங்களை சம்பாதிக்கின்றனர். அதே நேரத்தில் வேவ்வெறு மருந்து நிறுவனங்கள் தயாரிப்பில் உள்ள ஒரே மருந்து, வெவ்வேறு விலைகள் வைத்து விற்கப்படுகின்றன. உடனடி தீர்வு என்கிற ஒரே காரணத்திற்காக பலமடங்கு விலையுள்ள பொருளை வாங்கிக் கொண்டிருக்கிறோம். உண்மையில் உடனடி தீர்வு சரியானதா என்று நாம் யோசிக்கும் நிலையில்கூட நாம் இல்லை என்பதுதான் உண்மை.
நமக்கு ஏற்படும் தலைவலிக்கு பல காரணங்கள் உள்ளன. பித்த அதிகரிப்பு, சளி பிரச்சனை, கண் பிரச்சனை, வயிற்று பிரச்சனை என்று எல்லாவற்றிற்க்கும் தலைவலிதான் வருக்கிறது. அலோபதியின் சின்ன மாத்திரையால் உடனடியாக தலைவலி நீக்கப்படுகிறது. ஆனால் ஏற்படும் பக்கவிளைவுகள் நமக்கு தெரிவதில்லை. ஏன் பக்கவிளைவு ஏற்படுகிறது என்பதை அலோபதியிலும் கண்டுபிடிக்க முடிவதில்லை. நமக்கு இன்றைய நாளில் ஏற்படும் கேன்சர் போன்ற தீவிர பிர்ச்சனைகளுக்கு நமது உணவு மாற்றங்களும், அலோபதியின் அதீத/தேவையற்ற பயன்பாடுகளும்தான் காரணம்.
பக்க விளைவுகளற்ற சித்த/ஆயுர்வேத, நாட்டு/கை மருத்துவத்தைவிட பலவகை பக்கவிளைவுகளும் அதற்கான நாம் செலவழிக்கப் போகிற அளவும் உயிருக்கு ஏற்படபோகும் ஆபத்தையும்கூட கருத்தில் கொள்ளாமல் நாம் அதன் பின் செல்ல நமக்கு ஏற்பட்டிருக்கும் நிர்பந்ததிற்கு நாம் மட்டும்தான் காரணம் என்பது மிகமெதுவாகத்தான் நமக்கு புரிய ஆரம்பித்திருக்கிறது.

No comments: